TamilsGuide

கனடா ஓபன் டென்னிஸ் - முன்னணி வீரர்கள் விலகியதால் ரசிகர்கள் கவலை

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொரண்டோ நகரில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இந்த தொடரில் பல முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளதால் டென்னிஸ் ரசிகர்கள் இந்த தொடரை ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்.

இந்நிலையில், இந்த தொடரில் இருந்து முதல் நிலை வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர்(Jannik Sinner) , ஐந்தாம் நிலை  வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) ,  மற்றும் பிரிட்டனின் ஜாக் டிராபர் (Jack-draper) ஆகியோர் விலகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

காயம் காரணமாக கனடா ஓபன் தொடரில் விளையாடவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். முன்னணி வீரர்கள் விலகி உள்ளதால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment