2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் அரச வருவாய் 1,942.36 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் புள்ளிவிவரங்களுடன் ஒப்பிடுகையில் 19.95% அதிகரிப்பைக் குறிக்கிறது என்று இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில், அரச வருவாய் 1,619.23 பில்லியன் ரூபாவாக இருந்ததாக CBSL குறிப்பிட்டுள்ளது.
இந்த அதிகரிப்பு பெரும்பாலும் அதிக வரி வசூல் காரணமாகும்.
வரி வருவாய் 20.87% அதிகரித்து ரூ. 1,802.48 பில்லியனாக உயர்ந்துள்ளது.
இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ. 1,491.25 பில்லியனாக இருந்தது.
இந்த புள்ளிவிவரங்கள் மத்திய வங்கியின் அண்மைய வாராந்திர பொருளாதார குறிகாட்டிகள் அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


