TamilsGuide

உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி  விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம்  நிர்ணயித்துள்ளது.

போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, முந்தைய அரசாங்க காலத்தின் போது, அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை போலி அதிகார பத்திர உரிமம் தயாரித்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீது இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment