TamilsGuide

காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் -சுற்றுச் சூழல் அமைச்சு

நாட்டில் காட்டுயானைகளின் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக அண்மைக்காலமாக வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் துறையின் உதவியுடன் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என  சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெண்டி தெரிவித்தார்

இது குறித்து அவர்  மேலும் தெரிவிக்கையில் ” ‘கடந்த காலங்களில் பதிவான பெரும்பாலான யானைகளின் உயிரிழப்புகள் காப்பகங்களுக்கு வெளியே நிகழ்ந்துள்ளன. இது ஒரு சோகமான மற்றும் கவலைக்கிடமான சூழ்நிலை. அதனால்தான் நாங்கள் இந்த விசாரணையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் காட்டு யானைகளை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும். குற்றவாளிகளை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு  அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 

Leave a comment

Comment