அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக கடமை தவறியதாக குற்றம் சாட்டப்படிருந்தார்.
இதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழு, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணையை நடத்த தீர்மானித்தது.
இதற்கமைய முறையான ஒழுங்கு விசாரணையின் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தீர்ப்பாயத்தால் கடந்த 4ஆம் திகதி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட முறையான ஒழுங்கு விசாரணை அறிக்கை, முறைப்பாட்டை கையாளும் அதிகாரியின் அறிக்கை, பாதுகாப்பு அதிகாரியின் அறிக்கை மற்றும் அந்த அறிக்கையுடன் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து தொடர்புடைய ஆவணங்களையும் முழுமையாக ஆய்வு செய்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


