மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பிரவூன்ஸ்வீக் தோட்டம் , மோட்டிங்ஹாம் பிரிவில் மரக்கிளை முறிந்து விழுந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டிங்ஹாம் தோட்டத்தை சேர்ந்த 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான ராசமாணிக்கம் செல்வக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 10 மணியளவிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில் குறித்த நபர் விறகு சேகரிப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது, கடும் காற்றால் மரக்கிளை முறிந்து விழுந்து, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


