TamilsGuide

தேசபந்து தென்னகோன் விவகாரம் – விசாரணை அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படும்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இதேவேளை, பரிந்துரைகளுடன் அறிக்கை தயாரிப்பது இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் குறித்த குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேசபந்து தென்னகோன் செய்ததாகக் கூறப்படும் கடுமையான அதிகார துஷ்பிரயோகம் மற்றும் தவறான நடத்தை குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட குறித்த விசாரணைக் குழு சமீபத்தில் சாட்சியமளிப்பு பணியை முடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Comment