TamilsGuide

இலங்கை போக்குவரத்து சபையில் 750 வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நாடு முழுவதும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்களை கோரியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

இது தொடர்பான ஒரு பத்திரிகை விளம்பரம் இன்று (18)வெளியிடப்பட்டது.

அதன்படி, சாரதி பணிக்கு 450 காலியிடங்கள் (ஆண்களுக்கு 425 மற்றும் பெண்களுக்கு 25) மற்றும் நடத்துனர் பணிக்கு 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275 மற்றும் பெண்களுக்கு 25) உள்ளன.

விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி 2025 ஜூலை 31 ஆகும்.

விண்ணப்பிக்கும் பதவி மற்றும் தொடர்புடைய மாகாணம் உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்றும் SLTB அறிவித்துள்ளது.
 

Leave a comment

Comment