'இவர்கள் வித்தியாசமானவர்கள்' (1980) என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் வேலு பிரபாகரன். அதனைத் தொடர்ந்து இயக்குனராக அவதாரம் எடுத்தார். 'நாளைய மனிதன்', 'அதிசய மனிதன்', 'அசுரன்', 'ராஜாளி' போன்ற படங்களை இயக்கியுள்ளார். இது தவிர சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
68 வயதாகும் வேலுபிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்கிடையில் நேற்று அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது. அதனைத் தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு வேலு பிரபாகரனுக்கு வெண்டிலேட்டர் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 5.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி வேலு பிரபாகரன் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


