TamilsGuide

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தம்

கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் கொழும்பு பங்குச் சந்தையில் தினசரி வர்த்தக நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.

பல தரகு நிறுவனங்களினு; ஒழுங்கு மேலாண்மை அமைப்பு செயலிழந்ததால் சந்தை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது.

எவ்வாறெனினும் தினசரி வர்த்தக நடவடிக்கை காலை 10:40 அளவில் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது

இதேவேளை கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் நேற்றைய தினம் முதன்முறையாக 19,000 புள்ளிகளைக் கடந்தது

நேற்றைய வர்த்தக நாள் முடிவில், 18,838.39 புள்ளிகளாகப் பதிவாகியிருந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண், வர்த்தக நாள் ஆரம்பத்தில் வரலாற்றில் முதன்முறையாக 19 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.
 

Leave a comment

Comment