TamilsGuide

கிளிநொச்சியில் நெல் வழங்கல் ஆரம்பம்

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 2025 சிறுபோக நெற்ச்செய்கையாக மாவட்டத்தின் மிகப்பெரிய குளமாகிய இரணைமடுக்குளம் உள்ளிட்ட ஒன்பது நீர்ப்பாசன குளங்கள் மூலம் 31,500ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில் நெல் அறுவடை ஆரம்பிப்பதற்கு முன்பே அரசாங்கம் நிர்ணய விலையை அறிவித்துள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்கி வருகின்றனர்.

அரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட நெல்லின் விலை கிலோ ஒன்றுக்கு நாட்டரிசி 120 ரூபாவாகவும், சம்பா அரிசி 125 ரூபாவாகவும், கீரி சம்பா அரிசி 132 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment