TamilsGuide

லியோ கொடுத்த வெற்றி - கூலி படத்திற்கு சம்பளத்தை இரட்டிப்பாக்கிய லோகேஷ்

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் படத்தில் இடம் பெற்ற பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது என தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடந்த நேர்காணலின் லோகேஷ் கனகராஜ் படத்தை குறித்த சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் " கூலி திரைப்படத்திற்கு என்னுடைய சம்பளம் 50 கோடி ரூபாய். நான் இரண்டு வருடம் செய்த கடின உழைப்பிற்கு கிடைத்த ஊதியம் அதுமட்டுமில்லாமல் லியோ திரைப்படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது அதனால் இப்படத்தில் என் சம்பளம் அப்படத்தை விட இரட்டிப்பானது." என கூறியுள்ளார். 
 

Leave a comment

Comment