TamilsGuide

Jiiva 46 - மீண்டும் இணையும் ப்ளாக் திரைப்பட கூட்டணி

ஜீவா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது ப்ளாக் திரைப்படம். இப்படத்தை பாலசுப்பிரமணி கேஜி இயக்கியிருந்தார். ஜீவாவின் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சாம்.சி எஸ் இசையமைத்திருந்தார். திரைப்படம் ஒரு டைம் லூப் கதையம்சத்தில் உருவாகி மக்களின் ஆதரவை பெற்றது.

இந்நிலையில் மீண்டும் ப்ளாக் திரைப்பட இயக்குநர் கேஜி பாலசுப்பிரமணி இயக்கும் அடுத்த படத்தில் ஜீவா நடிக்கவுள்ளார். படத்தின் பூஜை விழா இன்று நடைப்பெற்றது. இப்படம் தற்காலிகமாக ஜீவா 46 என அழைக்கப்படுகிறது. இது ஜீவா நடிக்கும் 46 -வது திரைப்படமாகும். பூஜை விழாவில் நடிகர் விஷால் மற்றும் ஜீவாவின் தந்தை கலந்துக் கொண்டனர்.

படத்தில் பப்லூ ப்ருதிவிராஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். ராவண கோட்டம் படத்தை தயாரித்த கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவை கோகுல் பினாய் மற்றும் படத்தொகுப்பை சதீஷ் குமார் மேற்கொள்கின்றனர். படத்தை பற்றிய கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 

Leave a comment

Comment