TamilsGuide

சிவபூமி திருவாசக அரங்கம் திறந்து வைக்கப்பட்டது

நாவற்குழி திருவாசக அரண்மனைக்கு பக்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிவபூமி திருவாசக அரங்கம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த வைத்திய நிபுணர் மனோமோகன் சிகெளாி தம்பதிகள் மற்றும் கௌரவ வட மாகாண ஆளுநர் அவா்களினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வா் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் நிகழ்விற்கு,

ஏராளமான விருந்தினா்கள், கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.

நாவற்குழி திருவாசக அரண்மனைக்கு பக்கத்தில் மிக அற்புதமாக கலை வேலைப்பாடுகள் மற்றும் நவீன வசதிகளுடன்.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த அரங்கு எதிா்காலத்தில் கலைகளுக்கும் சயம வளா்ச்சிக்கும் பெருந் தொண்டாற்றும் என உறுதியாக நம்பலாம்.

வைத்திய கலாநிதி.சிவகௌரி மனோமோகன் அவர்கள் தனது பெற்றோர்களான வைத்திய கலாநிதி. த.சண்முகநாதன்(முன்னாள் பணிப்பாளர் யாழ் போதனா வைத்தியசாலை) அருந்ததி நினைவாக

இந்த அற்புதமான சிவபூமி திருவாசக அரங்கத்தை கட்டி தந்துள்ளார்.

எவ்வித கட்டணங்களும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக சமய மற்றும் கலைப் பணிகளுக்காக இந்த அரங்கினை பயன்படுத்தி கொள்ள முடியும்.
 

Leave a comment

Comment