TamilsGuide

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 07 லட்சத்து 45 ஆயிரம் ரூபா பெறுமதியான 4601 சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிசார் முன்னெடுத்துள்ளதுடன் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment