TamilsGuide

வவுனியாவில் நடைபாதை வர்த்தக நிலையங்கள் அகற்றல்

வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்கள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

வவுனியா யாழ்வீதியில் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் காணப்பட்ட நடைபாதை வர்த்தக நிலையங்களே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மாநகர சபையினால் குறித்த வர்த்தக நிலையங்கள் அகற்றப்பட்டுள்ளதுடன் அங்கு காணப்பட்ட கடைகளில் இருந்த பொருட்கள் மாநகர சபையின் உழவு இயந்திர பெட்டிகளில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டன.

Leave a comment

Comment