ராஜகிரியவின் கலபலுவாவ பகுதியில் ஒருவரைத் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் நடிகை பியூமி ஹன்சமாலியின் மகன் வெலிக்கடை பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரான பியூமி ஹன்சமாலியின் மகன் பதில்மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது பதில்மேலதிக நீதவான் சந்தேக நபரை ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை தாக்குதலுக்குள்ளான நபர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


