TamilsGuide

எழுவை தீவு பகுதியில் 15 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம், எழுவைதீவு கடற்பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் மிதந்து வந்த பொதியொன்றினை மீட்டு, சோதனையிட்ட போது அதனுள் இருந்து சுமார் 15மில்லியன் ரூபாய் பெறுமதியான 38 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம், எலுவை தீவுக்கு அப்பால் உள்ள  பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று (12) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 15 மில்லியன் ரூபாய்க்கும் அதிகளவு பெறுமதியான சுமார் 38 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையானது, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஊர்காவல்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளது.
 

Leave a comment

Comment