TamilsGuide

ஈரானில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற நபருக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றம்

ஈரானில் புக்கானைச் சேர்ந்த ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏறப்டுத்தியிருந்தது.

இந்நிலையில் கொலைக் குற்றவாளிக்கு ஈரானிய அதிகாரிகள் பொதுவில் மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பொதுவில் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வழக்கின் மிகவும் தீவிரத் தன்மை காரணமாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடந்த மார்ச் மாதம் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் பொதுமக்கள் முன்னிலையில் வைத்து தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற கடுமையான குற்றங்களுக்கு ஈரானில் மரண தண்டனை பொதுவாக விதிக்கப்படுகிறது.

மனித உரிமை குழுக்களின் தரவுகளின்படி, உலகில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகளை நிறைவேற்றும் இரண்டு நாடுகள் சீனாவும் ஈரானும் ஆகும். 
 

Leave a comment

Comment