TamilsGuide

இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்படும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக செயல்படுத்தப்படும் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள் 20 இலட்சம் குடும்பங்களை வலுவூட்டும் Next Sri Lanka அரசாங்கத்தின் திட்டத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களில் 18 வயது முதல் 35 எது வரையான 50,000 இளைஞர் யுவதிகளுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் ஒன்றை மேற்கொள்வதற்கு தொழிற்பயிற்சியை பூரண புலமைப் பரிசிலுடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 15ஆம் திகதி சர்வதேச இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு 15ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை வாரம் முழுவதும் நாடு முழுவதிலும் உள்ள பிரதேச செயலகங்களில், காலை 9.00 முதல் மாலை 4.00 இவரை இளைஞர் யுவதிகளின் திறனை பரீட்சிக்கும் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

www.nextsrilanka.lk என்ற இணையதளத்தில் பிரவேசித்து நீங்கள் இதற்காக பதிவு செய்து கொள்ள முடியும்.
 

Leave a comment

Comment