TamilsGuide

பூஜா ஹெக்டே ஆட்டம் போடும் கூலியின் 2ஆவது சிங்கிள் வெளியானது..

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் இடம் பிடித்துள்ள சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம்பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.

இதற்கிடையே பூஜா ஹெக்டே ஆட்டம்போடும் 2ஆவது சிங்கிள் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி இப்பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.

விஷ்ணு ஏதவன் பாடல் வரிகளை எழுத சுப்லாஷினி, அனிருத் பாடியுள்ளனர். இவருடன் அசல் கோலார் RAP செய்துள்ளார்.
 

Leave a comment

Comment