கல்பிட்டி, தளுவ பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடற்படையினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தின் போது கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது.
அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
எனினும், இக்குற்றச்சாடை கடற்படையினர் ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


