நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.
கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.
கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினர். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்.


