TamilsGuide

அமலாவுக்காக மட்டுமே பார்த்து திரிந்த காலமும் கூட

அமலாவுக்காக மட்டுமே பார்த்து திரிந்த காலமும் கூட.அமலா ஒரு படத்தில் நடித்தார் என்றால் அந்தப் படத்தின் Hero எனக்கு இரண்டாம் பட்சம்தான்.

கமல் அமலாவை சேலையை மூடி உதட்டில் கிஸ் அடித்தாலும் அவர் மீது கோபம்தான் வந்தது.
ரஜினி அமலாவுடன் நீச்சல் குளத்தில் வம்பிழுத்து விளையாடிய பொழுது அவர் மீதும் அடங்காத கோபம்தான்.
ஜீவா-வில் Swimming suit-ல் அமலா ஓடி வந்த பொழுது அமலா மீதே கோபம் வந்தது.
அமலா சின்ன நடிகர்களுடன் நடிக்கும் பொழுது மட்டும் நான் மிகவும் ரசித்துப் பார்ப்பேன்.ஏன்னா அவங்க கொஞ்சம் அமலாவை சூதானமா பாத்துப்பாங்க என்கிற நம்பிக்கையிலே.????????

அன்றைக்கு Bombay dyeing கம்பெனியில் அமலா படத்தைப் போட்டு காலண்டர் தயாரித்து இருந்தார்கள்.நான்,சுற்றியுள்ளதையெல்லாம் கட் செய்து அவர் தோள் மீது கை போட்ட படி பாக்கெட் கேமராவில் ஒரு படமும் எடுத்திருந்தேன்.அதை ரொம்ப நாளா பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்.அது எப்படியோ Miss ஆனது.????
அமலாவை அறிமுகப் படுத்திய ஒரே காரணத்திற்காகவே டி.ஆரை எனக்கு மிகவும் பிடிக்க ஆரம்பித்தது.
அமலா நடித்த டப்பா படங்களைக் கூட பார்த்து இருக்கேன்.
என்னடா இப்படி கிறுக்கனா இருந்திருக்கேன்னு நீங்க என்னையை கேட்டீங்கன்னா எனக்கு ஆதரவா நாட்டியப் போராளி பத்மினியை நேசித்த எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களும்,ஸ்ரீதேவியை வெறித்தனமா நேசித்த இயக்குநர் ராம்கோபால் வர்மா அவர்களும் நிக்கிறாங்க.
எழுத்தாளர் பிரபஞ்சன் 'பத்மினியுடன் பாட்டுப் பாடியபடி படகில் சென்றது நான்தானேயன்றி சிவாஜி அல்ல'என்று சொல்லும் பொழுது என் மனம் ஆச்சர்யம் அடைந்தது.
ராம்கோபால் வர்மா ஸ்ரீதேவியை நேசித்ததை படித்த பொழுது வியப்புக்குள்ளானேன்.
இப்படி ஒவ்வொருவரும் அவர்களுடைய காலத்தில் ஏதோவொரு நடிகையுடன் மையல் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

படம் உதவி:Mr.ஆறுமுகம் சிக்ஸ்ஃபேஸ் .
Manisekaran

Leave a comment

Comment