யாழ். தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பௌர்ணமி தினமான இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை ஆறு மணி வரை இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
”விகாரை அகற்றப்பட்டு, காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டு வரும் இப் போராட்டத்தில், காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


