TamilsGuide

இலங்கை கிரிக்கெட்  சபையின் முக்கிய அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இன்று (10) நடைபெறவிருக்கும் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும்  விற்பனையாகி விட்டதாக இலங்கை கிரிக்கெட்  சபை அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, டிக்கெட் விற்பனை நிலையங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை கிரிக்கெட் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

டிக்கெட் வைத்திருப்பவர்கள் மைதானத்திற்குள் நுழைய மாலை 5 மணி முதல் வாயில்கள் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கண்டியில் உள்ள பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்   போட்டி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment