TamilsGuide

அதிகரித்து வரும் சிறைக் கைதிகளின் எண்ணிக்கை

நாட்டின் சிறைச்சாலைகளில் அதிகளவிலான கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்” சிறைச்சாலைகளில் 12,000 கைதிகளை மட்டும் அடைக்கும் வசதி உள்ளபோதும், தற்போது 33,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.”

கொழும்பில் இன்று (09) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்போது ” சிறைச்சாலை அதிகாரிகளுக்கும்  பற்றாக்குறை காணப்படுவதாக  அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், 65% போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு  சிறைவாசம் குறைக்கப்பட வேண்டும் எனவும், இல்லையெனில் இந்த நாடு மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதேசமயம் ”சிறைச்சாலை அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக சிறப்பாக பணியாற்றுகிறார்கள் எனவும்,  ஒரு சிலரால் செய்யப்பட்ட சில தவறுகள் நம்பிக்கையை சேதப்படுத்தியிருக்கலாம் எனவும்,  இலங்கையில் உள்ள பல சிறைச்சாலைகள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் அமைந்துள்ளன எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சிறைச்சாலை ஒட்டுமொத்தமாக நல்ல நிலையில் உள்ளது எனவும், தொலைபேசிகள் குறைவாகவே உள்ளன எனவும்  தற்போது முடிந்தவரை பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment