TamilsGuide

சிங்கமலை நீர் தேக்கத்தில் தவறி விழுந்த சிறுவன் சடலமாக மீட்பு

ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்க மலை நீர்த்தேக்கத்தில் தவறி விழுந்த 17 வயதான  சிறுவன்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சை எழுதி தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்கும் ஆறு பாடசாலை மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில் உள்ள சிங்கமலை நீர்த்தேக்கத்திற்கு  புகைப்படம் எடுப்பதற்காகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மாணவர்களில் ஒருவரான  தமிழ் மாறன் என்ற மாணவன்  அட்டை கடிக்கு  உள்ளானதால்  இரத்தத்தை கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில்  ஏறிய போது தவறி விழுந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த மாணவரின் உடலைத் தேடும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டது.

இதன் காரணமாக ஹட்டன் நகருக்கு முக்கியமாக நீர் வழங்கும் சிங்கமலை  நீர்த்தேக்கத்திற்கான நீர் விநியோகம் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளதாக ஹட்டன் நீர் வழங்கல் பிரிவு  தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்த சிறுவனின் சடலத்தை இன்று  கடற்படையினரின் உதவியோடு மீட்டுள்ளதாக  ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
 

Leave a comment

Comment