ராமர் இந்தியாவில் உள்ள அயோத்தியில் பிறந்தவர் அல்ல, மாறாக நேபாளத்தில் பிறந்தார் என்று அந்நாட்டு பிரதமர் கே.பி.சர்மா ஒலி தெரிவித்தார்.
காத்மாண்டுவில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அவர் இந்தக் கூற்றை தெரிவித்தார்.
இந்த வார்த்தைகளை தான் சொந்தமாகச் சொல்லவில்லை என்றும், வால்மீகி எழுதிய அசல் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இதைச் சொல்கிறேன் என்றும் சர்மா ஒலி கூறினார்.
ராமரின் உண்மையான பிறந்த இடம் நேபாளத்தில் உள்ளது என்ற உண்மையை மக்கள் பரப்ப தயங்க வேண்டாம் என்று அவர் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இதே போன்ற கருத்துக்களை ஒலி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் தனது நாட்டில் உள்ளசித்வான் மாவட்டத்தின் தோரி பகுதிதான் உண்மையான அயோத்தி என்றும், ராமர் அங்கு பிறந்தார் என்றும் கூறினார்.
ராமர் மட்டுமல்ல, சிவன் மற்றும் விஸ்வாமித்திரரும் தனது நாட்டில் பிறந்ததாக ஒலி சமீபத்தில் கூறினார். புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பல இடங்கள் இப்போது நேபாளத்தின் சன்சாரி மாவட்டத்தில் உள்ளன என்று அவர் கூறினார்.


