சித்தார்த் அவரது 40-வது திரைப்படமாக 3 BHK திரைப்படத்தில் நடித்துள்ளார். 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் போன்ற படங்களை இயக்கிய ஸ்ரீகணேஷ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக சைத்ரா நடித்துள்ளார். இப்படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு நடுத்தர குடும்பம் அவர்களது கனவு இல்லத்தை வாங்க எப்படி கஷ்டப்படுகிறார்கள என்பதை உண்மைக்கு மிக நெருக்கமாக பதிவு செய்துள்ளனர்.
படத்தின் வெற்றிவிழா நேற்று சென்னையில் நடைப்பெற்றது. அதில் நடிகர் சரத்குமார் மற்றும் சித்தார்த் மாற்றி மாற்றி கலாய்த்துக் கொண்டனர். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விழாவில் படத்தின் இசையமைப்பாளரான அம்ரித் ராம்நாத்திற்கு சரத்குமார் அவரது வாட்சை பரிசாக கொடுத்தார்.
சித்தார்த் சல்மான் கானைப்போல் கூலிங் கிளாசை சட்டைக்கு பின்னாடி மாட்டி வைத்துள்ளதை அனைவரிடமும் சாரி கேட்டு முன்னாடி எடுங்கள் என நகைச்சுவையாக கூறினார். மேலும் சித்தார்த் சரத் குமாரிடம் " அம்ரித் வாட்ச் கேட்டான் அதனால் அவனுக்கு அதை கொடுத்தீர்கள். எனக்கு உங்க வீடு மிகவும் பிடிக்கும் சார், சைத்ராவிற்கு உங்கள் காரை மிகவும் பிடிக்கும் சார் அதனால் அடுத்த தடவை எனக்கு அதை பரிசாக கொடுங்கள்" என கலாய்த்து பேசினார்.


