எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'.இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். திரைப்படம் அடுத்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகிறது.
அண்மையில் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு குட்டி கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. படத்தில் விஜய் காவல் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தைதொடர்ந்து எச்.வினோத் அடுத்ததாக நடிகர் துனுஷ் நடிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூசியோஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது மேலும் படத்தி இசையை சாம் சி.எஸ் மேற்கொள்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுக்குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


