நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சிக்கிடு பாடலை சாண்டி மாஸ்டர் இயக்கியுள்ளார். அதில் இடம் பெற்ற நடன ஸ்டெப்புகள் இணையத்தில் வைரலானது.
நேற்று நடன இயக்குநரான சாண்டி மாஸ்டர் பிறந்தநாள் கொண்டாடினார். அப்பொழுது ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு ரஜினி அவருக்கு வாழ்த்து தெரிவித்ததாக கூறி நெகிழ்ச்சியாக பதிவிட்டிருந்தார்.
மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் அர்ஜுன் மற்றும் அவரது மருமகன் உமாபதி ராமையாவுடன் சாண்டி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதன் வீடியோவை சாண்டி பதிவிட்டு நன்றி தெரிவித்து இருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் ஒரு வேளை கூலி திரைப்படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்சில் ஒரு அங்கமாக இருக்குமோ என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் விஜய் நடித்த லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதற்கான விடை விரைவில் தெரியும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


