TamilsGuide

பொலிசாரின் சமிக்ஞையை மீறி சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிசூடு

பொலிசாரின் சமிக்ஞையை மீறி மணல் ஏற்றிய டிப்பர் வாகனம் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு மேற்கொண்டுள்ளனர்.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறுப் பகுதியில் நேற்றிரவு சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரம் இன்றி இவ்வாறு பயணித்த டிப்பர் மீதே துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரவு 9.30 மணியளவில் மணல் ஏற்றிய டிப்பர் வாகனத்தை புளியம்பொக்கனை சந்தியில் வைத்து பொலிசார் மறித்து சோதனை செய்ய முற்பட்ட நிலையில் டிப்பர் வாகனம் நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதன்போது, டிப்பர் மீது பொலிசார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.

பொலிசாரின் துப்பாக்கி பிரயோகத்தில் டிப்பர் வாகனம் காற்று போன நிலையில் டிப்பர் வாகனத்தை விட்டு சாரதி தப்பியோடியுள்ளார்.

மணல் மற்றும் டிப்பர் வாகனத்தை மீட்ட பொலிசார் சாரதியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a comment

Comment