அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்து 'லவ் மேரேஜ்' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருவானது. இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுஷ்மிதா பட் நடித்திருந்தார்.
திருமணம் தாமதமாவதால் ஒருவர், குடும்பத்திலும் சமூகத்திலும் எதிர்கொள்ளும் பிரச்சினை மற்றும் சிக்கல்களைப் பேசும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் இப்படத்தை இயக்கிய சண்முக பிரியன் அடுத்து மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவன தயாரிப்பில் படத்தை இயக்கவுள்ளார். இப்படம் பெரிய பொருட் செலவில் உருவாக இருக்கிறது.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் இதற்கு முன் வெற்றி படங்களான குட் நைட், லவ்வர் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி ஆகிய திரைப்படங்களை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஒன்ஸ் மோர் மற்றும் ஹாப்பி எண்டிங் ஆகிய திரைப்படங்கள் வெளிவர இருக்கிறது.


