TamilsGuide

எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது - ஈரான் அரசு தலைவரை பார்த்து மக்கள் முழக்கம்

அணு ஆயுதத்தை ஈரான் தயாரிப்பதாக கூறி அந்நாடு மீது இஸ்ரேல் கடந்த மாதம் 13-ந்தேதி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரானின் போர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்ள 3 முக்கிய அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்த அணு நிலையங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

இதனையடுத்து 12 நாள் மோதலுக்குப் பிறகு, இஸ்ரேல் - இரான் நாட்டிற்கு இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.

இஸ்ரேல் உடனான போருக்கு பிறகு முதன் முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஈரானிய அரசு தலைவர் அயதுல்லா கொமேனி தோன்றியுள்ளார்.

அப்போது, எங்களது தலைவருக்காகவே, நரம்புகளில் ரத்தம் பாய்கிறது என மக்கள் நெகிழ்ச்சி முழக்கம் எழுப்பினர்.

Leave a comment

Comment