TamilsGuide

எலான் மஸ்க் கட்சியின் பொருளாளராக இந்திய வம்சாவளி பிரமுகர் நியமனம்

டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார்.

இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.

இதனால் டிரம்புக்கு நெருங்கிய நண்பராகவும், அவரது நிர்வாகத்தில் அரசு செலவுகளை குறைக்கும் டாஸ் துறைக்கும் தலைமை வகித்தார்.

ஆனால் BIG BEAUTIGUL என்ற புதிய மசோதாவைக் கடுமையாக எதிர்த்த எலான் மஸ்க், டிரம்ப் அரசு வழங்கிய பதவியில் இருந்து விலகி டிரம்புக்கு எதிராக கருத்துகளை வெளியிட்டு வந்தார்.

இந்த நிலையில், அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார்.

மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய கட்சி அறிவிப்பால் அமெரிக்க அதிபர் டிரம்ப்- எலான் மஸ்க் இடையேயான மோதல் மேலும் வலுத்துள்ளது.

எலான் மஸ்க் அமெரிக்கா கட்சியை தொடங்கிய நிலையில், அதன் பொருளாளராக வைபவ் தனேஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

எலான் மஸ்க்கின் `டெஸ்லா' நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக செயல்பட்டவர் வைபவ் தனேஜா.

இந்திய வம்சாவளி என்பதால், கட்சியின் முக்கிய பொறுப்பில் வெளிநாட்டவர் ஒருவரை நியமிப்பதா? என எலான் மஸ்க் மீது விமர்சனம் எழுந்துள்ளது.
 

Leave a comment

Comment