TamilsGuide

திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடைபெற்றது

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று விமர்சையாக நடைபெற்றது.

விண்ணைப் பிளந்த பக்தர்களின் 'அரோகரா' முழக்கத்துடன், மந்திரங்கள் ஓதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பக்தர்கள் எந்தவித நெருக்கடியும் இன்றி கும்பாபிஷேக விழாவை கண்டு ரசித்தனர். பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டு வருகிறது.

பக்தர்களின் பாதுகாப்பு கருதி மின் விளக்குகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்களும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதேபோல் கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மேலும் பாதுகாப்பு பணியில் 6 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்
 

Leave a comment

Comment