TamilsGuide

உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையில் 3 வருடத்திற்கு மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எல்லையில் உள்ள சுமி பிராந்தியத்தின் அருகே உள்ள குர்ஸ்க் பகுதியில் சண்டை அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் மீது இதுவரை இல்லாத அளவிற்கு, 550 ட்ரோன்கள், 11 ஏவுகணைகள் பயன்படுத்தி ரஷியா ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

கீவ், சுமி, கார்கிவ், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், செர்னிகிவப் ஆகிய நகரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 
 

Leave a comment

Comment