TamilsGuide

F1 போன்ற ரேசிங் படங்களில் நடிக்க விருப்பம் - அஜித்

நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு வருகிறார். சமீபத்தில் Mercedes-AMG GT3 என்ற காரை வாங்கி இருந்தார். அதனுடன் புகைப்படம் எடுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருந்தார். இந்த காரின் விலை சுமார் 10 கோடி ஆகும்.

சமீபத்தில் வெளியான அஜித்தின் தோற்றம் இணையத்தில் வைரலானது. மீண்டும் ஆலுமா டோலுமா லுக்கில் அஜித் என ரசிகர்கள் அவர்களது கருத்தை பதிவிட்டு வந்தனர்.

சமீபத்தில் பிராட் பிட் நடிப்பில் F1 என்ற திரைப்படம் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித் ரேசில் இருக்கும் போது அளித்த பேட்டியில் தொகுப்பாளர் அவரிடம் " பிராட்பிட் சமீபத்தில் ஃப்1 திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதேப்போல் இந்தியாவில் நீங்கள் 24H சீரீஸ் ரேஸை படத்தில் நடிப்பீர்களா?" என்ற கேள்விக்கு.

அஜித் " ஏன் நான் Fast&Furious 2அடுத்த பாகத்தில் அல்லது ஃப்1 படத்தின் அடுத்த பாகத்தில் , நான் என்னுடைய படங்களில் நானே தான் அனைத்து ஸ்டண்டையும் செய்வேன். அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்" என கூறியுள்ளார்.
 

Leave a comment

Comment