TamilsGuide

வவுனியாவில் வாகன விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வவுனியா யாழ், வீதியில் இன்று இடம்பெற்ற வாகன  விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் இன்று காலை இடம்பெற்றது.

யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த வான் ஒன்று துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் மீது மோதியமையே குறித்த விபத்திற்குக் காரணமென தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் விசாரணையில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த 69 வயதான  ஜெகதீஸ்வரன் எனத் தெரிய வந்துள்ளது.

இவ் விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a comment

Comment