TamilsGuide

மதுபோதையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சாரதிக்கு கடூழிய சிறை

மதுபோதையில் வாகனம் செலுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட பாடசாலைப் பேருந்து சாரதிக்கு கந்தளாய் தலைமை நீதிவான் நீதிமன்றம் இரண்டு மாத கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

எல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய சாரதிக்கே இவ்வாறு சிறைத் தண்டனை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் கந்தளாய் தலைமை நீதிவான், சாரதியின் அனுமதிப் பத்திர உரிமத்தை ஒரு வருட காலத்திற்கு இடை நிறுத்துவதற்கு உத்தரவு பிறப்பித்ததுடன், 30,000 ரூபா அபராதமும் விதித்தார்.

இந்த வாரம் கல்விச் சுற்றுலாவிற்காக எல்லவிலிருந்து திருகோணமலைக்கு படாசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றபோது பேருந்தின் சாரதி மதுபோதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து பொலிஸ் அதிகாரிகள் அவரை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர்.

மாணவர்கள் தங்கள் சுற்றுலா பயணத்தை தொடர்வதற்கு மற்றுமோர் சாரதி நியமிக்கப்பட்டார்.
 

Leave a comment

Comment