TamilsGuide

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தொடக்க நிகழ்வு- மக்கள் அவதானம்

தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) 2025 ஆகஸ்ட் 2 அன்று அதிகாரப்பூர்வமான ஆரம்ப விழா தனிப்பட்ட அழைப்பின் பேரில் மாத்திரம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா,

பிரமாண்டமான திறப்பு விழாவிற்கான அங்கீகரிக்கப்படாத டிக்கெட்டுகள் விநியோகிக்கப்படுவதாக தங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு அழைப்பின் பேரில் மட்டுமே என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

மேலும் எந்த மூன்றாம் தரப்பினரும் டிக்கெட்டுகளை வழங்கவோ, விநியோகிக்கவோ அல்லது விற்கவோ அங்கீகரிக்கப்படவில்லை.

எனவே, இது தொடர்பில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவும் – என்று அந்த அறிக்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த மேம்பாட்டில் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும்.

இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது.

கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே போலிவூட்டின் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், இலங்கைக்கு வருகை தந்து, இந்த பிரமாண்ட திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார்.

Leave a comment

Comment