TamilsGuide

கனடா பெண்மணி யாழ்ப்பாண விபத்தில் பலி

கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த பெண்ணொருவர் வீதி விபத்தில் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவில் வசித்து வரும் 59 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை டிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

உயிரிழந்த பெண் கனடாவில் இருந்து விடுமுறைக்காக யாழ்ப்பாணம் வந்து கொடிகாமம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் கடந்த 27ஆம் திகதி பாண் வாங்குவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றபோது வீதியால் சென்ற பட்டா ரக வாகனம் அவர் மீது மோதியது.  

விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கொடிகாம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
 

Leave a comment

Comment