நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. படத்தின் டப்பிங் மற்றும் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. கூலி திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் பாடலான சிக்கிடு பாடலின் வீடியோ அண்மையில் வெளியாகி மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. படத்தின் ஓவர்சீஸ் வெளியீட்டை ஹம்சினி எண்டெர்டெயின்மண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களின் புகைப்படங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், கூலி படத்தின் முக்கிய அப்டேட்டை இன்று இரவு 7 மணிக்கு வெளியிடப்படுவதாக படக்குழு நேற்று அறிவித்திருந்தது.
மேலும், கூலி திரைப்படத்தில் நடித்துள்ள அமீர் கானின் கதாப்பாத்திரம் குறித்து வெளியிடப்படவுள்ளதாக கூறப்பட்டது.
அதன்படி, கூலி திரைப்படத்தில் நடித்துள்ள அமீர் கானின் கதாப்பத்திரத்தின் பெயரையும், போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு அறிவித்துள்ளது. அமீர் கான் கூலி படத்தில் "தாஹா" என்கிற கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.


