இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் (CAASL) பதில் இயக்குநர் ஜெனரலாகவும், தலைமை நிர்வாக அதிகாரியாகவும் ரேஹான் வன்னியப்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
வன்னியப்பா 2003 முதல் பல்வேறு முக்கிய பதவிகளில் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தில் பணியாற்றி வருகிறார்.
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலான அனுபவத்துடனும், இந்தத் துறையைப் பற்றிய ஆழமான புரிதலுடனும், அவரது தலைமைத்துவம் இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை உந்துவதாக எதிர்பார்க்கப்படுகிறது என்று CAASL தெரிவித்துள்ளது.


