ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.
பிரித்தானியாவின் சில பகுதிகளில் இன்று 33.6 செல்சியஸ்ஸிற்கும் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் பதிவான அதிக வெப்பநிலையாக இது பதிவாகியுள்ளது.
பிரித்தானியாவின் தென்கிழக்கில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சில பகுதிகளில் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.
காட்டுத் தீ பரவக்கூடிய துருக்கியின் மேற்கு பகுதியிலிருந்து 50,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


