TamilsGuide

ஜப்பான் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தரும் தகவல் - சிறுவர்களை விட செல்லப்பிராணிகள் அதிகம்

ஜப்பானில், 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விட செல்லப்பிராணிகளே அதிகம் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிழக்கு ஆசிய நாடான ஜப்பான், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் வேகமாக வளர்ந்தாலும், அங்கு குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே செல்கின்றது.

இந்தநிலையில், தற்போது வெளிவந்துள்ள புதிய தரவு மற்றொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி ஜப்பானில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 14 இலட்சம் பேர் உள்ள நிலையில், நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகள் எண்ணிக்கை 16 இலட்சமாக உள்ளது.

கொரோனா காலக்கட்டத்திற்குப் பின்னரே இந்த எண்ணிக்கை வேகமாக உயர்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானில் தனியாக வசிக்கும் முதியோர் துணைக்கும், ஆறுதலுக்கும் செல்லப்பிராணிகளை அதிகளவில் வளர்ப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
 

Leave a comment

Comment