சீனாவில் பெய்துவரும் கனமழை காரணமாக சியான்ஃபெங் நகரில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன், 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
நீர் மற்றும் மின்சார விநியோகம் தடைபட்டதாகவும், பள்ளிகள் மூடப்பட்டதாகவும், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டதாகவும் அரச ஊடகங்கள் தெரிவித்தன.
காலநிலை மாற்றத்தினாலேயே கனமழை பெய்வதாக சீன வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


