முல்லைத்தீவு பிரதேசத்திற்குட்பட்ட மு.மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரச தமிழ் கலவன் பாடசாலையில் கடந்த 08 மாத காலமாக அதிபர் இல்லாமையினால் பாடசாலை மாணவர்கள் பெரிதும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவித்து பல்வேறு பதாகைகளை ஏந்தி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


