TamilsGuide

கனடாவில் நோயாளியுடன் தகாத உறவு பேணிய தாதிக்கு தண்டனை

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் பணியாற்றும் தாதி ஒருவர் நோயாளியுடன் தகாத உறவு பேணியமைக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாதி, ஒரு நோயாளியுடன் தனிப்பட்ட மற்றும் பாலுறவு தொடர்புடைய உறவில் ஈடுபட்டதற்காக 12 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 2023 ஜூலை முதல் செப்டம்பர் வரை இடம்பெற்றுள்ளது. இந்த உறவை “தனிப்பட்ட மற்றும் பாலுறவுசார்” என தாதியர் கல்லூரி விபரித்துள்ளது.

குறித்த தாதி, மனநல சிக்கலால் தாம் தவறு செய்ததாக ஆவணப்படுத்தியுள்ளார் என்பதுடன், அவரது பெயர் தனியுரிமை காரணமாக வெளியிடப்படவில்லை.    

இந்த நடவடிக்கைகள், எழுந்துள்ள தொழில்முறை சிக்கல்களுக்கு முறையான தீர்வாகும், மேலும் பொது மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும்,” என விசாரணை குழு தெரிவித்துள்ளது.
 

Leave a comment

Comment